தொடங்கிய நாமினேஷன்
இதையடுத்து, 2ம் வார தொடக்கத்திலேயே நாமினேஷனுக்கான வேலைகள் ஆரம்பித்த நிலையில், வீட்டிலுள்ள பெரும்பாலான நபர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதற்கிடையில், ஆண்கள் அணியிலிருந்து தீபக்கும், பெண்கள் அணியிலிருந்து தர்ஷாவும் அணிகள் மாறி விளையாடி வருகின்றனர். இந்த சமயத்தில் தான் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் சமைக்க பெண்கள் அணியிலிருந்து ஜாக்குலின் மற்றும் சாச்சனாவை ஆண்கள் அணியினர் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், இவர்கள் மட்டுமே சமைத்த பாத்திரத்தையும் கழுவ வேண்டும் எனக் கூறியதால், பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை முற்றியது.