கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கோர்ட்டில் ராஜேஸ்வரி, ரூ 100 கோடி வரதட்சணை கேட்டதாக சொல்ல,, அபிராமி இதெல்லாம் பொய் என்று சொன்னாள். இதனையடுத்து, கோர்ட்டில் அதற்கான ஆதாரம் என்ன இருக்கு என்று கேட்க, கார்த்திக் ஆதாரம் இருப்பதாக ஷாக் கொடுத்தான். அதாவது, ராஜேஸ்வரி வக்கீலிடம் பேசிய விஷயங்களை அருண் தூரத்தில் இருந்து வீடியோ எடுத்திருக்க, கார்த்திக், அதை கோர்ட்டில் சமர்ப்பித்தான். அதில் ராஜேஸ்வரி அபிராமி மேல் கொடுத்திருப்பது போலி கேஸ் என்பது தெரிய வந்தது.