இரவு உறக்கம் மிகவும் அவசியம். இரவில் நீங்கள் சரியான அளவு நேரம் உறங்கினால்தான், காலையில் எழுந்து சுறுசுறுப்பாக உங்களின் வேலைகளை செய்ய முடியும். இல்லாவிட்டால், அந்த நாளே உங்களுக்கு சோம்பலாக மாறிவிடும். உறக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்மெனில் நீங்கள் சில பானங்களை இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் பருகவேண்டும். கெமோமெலன் டீ, இது கெமோமெலன் என்ற பூவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தேநீர் ஆகும். இதை பருகுவது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும் மெலோட்டினினை சுரக்கச் செய்யும். அடுத்ததாக நீங்கள் பாலில் அல்லது சூடான தண்ணீர் மஞ்சள் தூளை சேர்த்து பருகலாம். மஞ்சள் பால் உங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் உதவும். அடுத்தது பாதாம் பாலையும் பருகலாம். பாதாம் பால் சுவையானதும் கூட. எனவே உங்களுக்கு பருகுவதும் எளிது. நீங்களே பாதாம் பால் மிக்ஸை வீட்டிலே தயாரித்துக்கொள்ளவும் முடியும். அடுத்து செரிப்பழத்தின் சாற்றை பருகலாம். வலேரியன் என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் டீ, இந்த டீயை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பானங்களை பருகி உங்கள் இரவு உறக்கத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்கள் என்னவென்று பாருங்கள்.