Soan Pappdi: தித்திக்கும் தீபாவளி ஸ்வீட் சோன் பப்டி செய்வது எப்படி?-how to prepare soan papdi sweet in home

Photo of author

By todaytamilnews


சிறிது நேரத்திற்கு பிறகு கிண்ணத்தில் ஊற்றிய அந்த சிரப்பை எடுத்து உருட்டினால் அது உருட்டும் வடிவிற்கு வரவேண்டும். அப்படி வந்துவிட்டால் ஒரு பேனை எடுத்து அதில் நெய்யை நன்கு தடவிக் கொள்ளவும். பின்பு அந்த சுகர் சிரப்பை எடுத்து அந்த பேனில் ஊற்ற வேண்டும்.  பிறகு அது சிறிது கெட்டியானதும், கைகளில் நன்கு நெய் தடவிக்கொண்டு அது நன்கு வெள்ளை நிறம் வரும் வரை அதை நன்றாக இழுத்து இழுத்து விட வேண்டும். அதை நன்றாக இழுத்து விடும் போது சோன் பப்டி மிகவும் மென்மையாக வரும். அது நன்கு வெள்ளை நிறம் வந்ததும் அதை செய்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையில் போட்டு அதை நன்கு இழுத்து இழுத்தே அதை நன்கு மாவுடன் கலந்து விடவும். இந்த கலவை ஆறுவதற்குள் ஒரு ட்ரையில் வெண்ணெய்யை தடவி இந்த கலவையை அதில் சூடாக இருக்கும் போதே வைத்து நன்கு பரப்பி விட்டு அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை போடவும். சில நிமிடங்களுக்கு பின் அதனை துண்டு துண்டுகளாக பகிர்ந்து வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சுவையான சோன் பப்டி தயார். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் தித்திக்கும் தீபாவளி சோன் பப்டியை கொடுத்து மகிழுங்கள். 


Leave a Comment