செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் சிறிதளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவை மூடி வைக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் பட்டாணியை போட்டு வதக்கவும். பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, மல்லி தூள், கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள், ஆம்சூர் தூள், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். பின் பிசைந்த மாவை எடுத்து சிறு துண்டுகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.