சர்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதையும் இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. உலகளவில் 65 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் இருமடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2021 இல் 761 மில்லியனிலிருந்து 2050 இல் 1.6 பில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதியவர்கள் பல வழிகளில் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறார்கள். அவர்கள் தொழிலாளர்கள், பராமரிப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் என பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் இளைய தலைமுறையினருடன் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.