பிங்க்வில்லாவிடம் பேசுகையில், ” வேட்டையனும், ராயனும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பது. தனுஷ் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், ஏனென்றால் அவர் எனக்கு பிடித்த ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினீர்களா என்று என்னிடம் கேட்டார். அவர் தலைவரின் மிகப்பெரிய ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நான் ஆமாம் என்றேன், தனுஷ் சார் சொன்னார், உங்கள் மீது எனக்கு முதல் முறையாக பொறாமையாக இருக்கிறது ” என்றார்.