இதைப் பார்த்த ஆனந்தி கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளானாள். இந்த நிலையில் அன்பு, மகேஷை சென்று சந்தித்தான். அப்போது மகேஷ் அன்புவிடம், அப்பா அம்மாவை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன். ஆனால் ஆனந்தியின் மனதில் இருக்கும் அழகனை முதலில் அழிக்க வேண்டும். அப்போதுதான் ஆனந்தி என்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாள். அவள் ஏற்றுக் கொண்ட பின்னர் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை. நான் ஆனந்தியை நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, அன்பு அதற்கான வேலையை நான் பார்த்து விட்டேன் என்று சொல்லி கிளம்பினான். கருணாகரன் ரூமில் இருந்த பேப்பர்கள் திடீரென்று கீழே விழ, ஆனந்தியை அழைத்த அவர், அதனை சரிவர எடுத்து வைக்குமாறு கட்டளையிட்டார். அப்படி அவள் எடுத்து வைக்கும் பொழுது அன்பின் ராஜினாமா கடிதம் அதில் இருந்ததை அவள் பார்த்து விட்டாள். இதை அவள் மற்றவர்களிடம் வந்து கூறினாள். அத்தோடு நேற்றைய எபிசோட் முடிவடைந்தது