இதை பார்த்த வடிவும், தர்மலிங்கமும் கடுப்பாகி உட்கார்ந்திருந்தனர். இதற்கிடையே, எழிலை தூக்க வேண்டும் என்று கௌதம் அனுப்பி இருந்த ஆட்கள், எழில் தனியாக வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, கெளதம் போன் செய்து வேலை முடிந்ததா என்று அவர்களிடம் கேட்க, எல்லோரும் குடும்பத்தோடு பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முடித்துவிட்டு கூப்பிடுகிறேன் என்று கூறினான். அத்தோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.