உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவரும் சூழ்நிலையில் இந்த உணவு முறைகளால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாகவே அதிகமான காபி, டீ போன்றவைகளை அடிக்கடி குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்து சமீபகாலமாக நிலவி வருகிறது. இதனையே பல மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். மேலும் காபி குடிக்கும் பழக்கமும் சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில் எண்டோகிரைன் சொசைட்டி வெளியீடு ஒரு நாளிதழில் வெளியான ஆய்வில், தினம் தோறும் குறிப்பிட்ட அளவு காபி குடிப்பவர்களின் உடலில் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் சீராகவும், கரோனரி இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் உட்பட இவைகளின் தாக்கம் கட்டுபடுத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.