ஒரு கப் ஜவ்வரிசியில் 14 கிராம் தண்ணீர் உள்ளது. 544 கலோரிகள், 135 கிராம் கார்போஹைட்ரேட்கள், 1.37 கிராம் நார்ச்சத்துக்கள், 0.29 கிராம் புரதச்சத்துக்கள், 0.03 கிராம் புரதச்சத்துக்கள், 0.03 கிராம் கொழுப்பு, 30.4 கிராம் கால்சியம், 2.4 கிராம் இரும்புச்சத்துக்கள், மெக்னீசியம் 1.52 மில்லி கிராம், பொட்டாசியம் 16.7 மில்லி கிராம், சோடியம் 2 மில்லி கிராம், தியாமின் 1 மில்லி கிராம், வைட்டமின்கள் பி5 2 மில்லி கிராம், பி6 1 மில்லி கிராம், ஃபோலேட் 1 மில்லி கிராம், கோலைன் 1.2 மில்லி கிராம் உள்ளது. ஜவ்வரசி நன்மைகளைப் பார்த்தால் ஆற்றலைத் தருகிறது. குளுட்டன் சேர்க்காத உணவை சாப்பிட உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களைக் கொடுக்கிறது. ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. அனீமியாவைப் போக்குகிறது. நரம்பு மண்டலத்தை காக்கிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை உறுதிசெய்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இதன் நன்மைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.