நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்
இயக்குநர் மணிரத்னம், நடிகை சமந்தா, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, மற்றும் வெங்கடேஷ் டகுபதி போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பாலிவுட் சினிமாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், அனன்யா பாண்டே, கிருதி சனோன், கரண் ஜோஹர், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நடிகர், நடிகைகளின் கவர்ச்சியால் அரங்கமே நிரம்பியிருந்தது.