திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்களைக் கடந்தும், உடல் நல பிரச்சனைகளில் இருந்து மீண்டெழுந்தும் நடிகை சமந்தா தற்போது சினிமாவில் மீண்டும் பீக்கில் சென்றுள்ளார். இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலியும் நடிகையுமான சோபிதா துலிபாலா, சினிமாவில் சமந்தாவின் வளர்ச்சியைப் பார்த்தால் சூப்பர் கூலாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.