அன்புவுக்கு திருமண ஏற்பாடு
இதற்கிடையே, அன்புவின் அம்மா நீ சம்மதம் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, உனக்கு திருமணம் நடப்பது நிச்சயம் என்று கறாராக சொல்லுகிறார். இதைக் கேட்ட அன்பு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறான். மற்றொரு பக்கம் மகேஷ், ஆனந்தியிடம், பரம்பரை நிலத்தை நீங்கள் பத்திரமாக மீட்டு விட்டீர்களா என்று கேட்க, ஆனந்தி சார் உங்களுக்கு எப்படி தெரியும் என்று மறு கேள்வி கேட்டாள்.