எனது கரம் உடைக்கப்பட்டது
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளரும், யூடியூபரும் ஆன சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். மதுரை சிறையில் இருந்து விடுதலை ஆன அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நீதிமன்றங்களுக்கு நன்றி. எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு முறை குண்டர் சட்டத்தில் என்னை பவளவிழா கொண்டாடும் ஒரு கட்சி அடைத்திருக்கிறது என்பது உள்ளபடியே வெட்கக்கேடு. நான் நடத்தி வந்த சவுக்கு மீடியா எட்டு மாத காலத்துக்குள் திராவிட மாடல் அரசின் உண்மை முகத்தை தோல் உரித்து காட்டியதன் காரணமாகவே என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. அவதூராக காவல்துறையினரை பற்றி பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் முழுக்க நான் போலீஸ் வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்டேன். கோவை சிறையிலேயே எனது வலது கரம் உடைக்கப்பட்டது.