தமிழகத்தில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளி 27.செப்டம்பர் 2024 உடன் அனைத்து தேர்வுகளும் முடிவடைய உள்ளது. இந்நிலையில் 5 நாட்கள் விடுமுறை விடப்படும். அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலதரப்பிலும் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து வரும் 6ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 7 திங்கள் அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.