விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போதே, பிரியங்காவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செட்டை விட்டு வெளியேறினார் மணிமேகலை. பின், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக பேசாமல், தன்னுடைய யூடியூப் சேனலில், அங்கு நடந்தவற்றை பேசி, பிரச்சினையை வெடிக்க வைத்தார்.