நீங்கள் ஒரு சிறந்த தாய் என்றால், நீங்கள் சில விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். எந்த நேரமும் குடும்பம், குடும்பம் என்றே ஓடிக்கொண்டிருக்கிறீர்களா எனில், உங்களுக்காக நீங்கள் செய்துகொள்ள வேண்டியவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்த விஷயங்களை செய்து கொள்வது குறித்து குற்றவுணர்வு கொள்ளக்கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் அம்மாக்கள்தான் அந்த வீட்டை முழுவதும் தாங்குபவர்களாக இருப்பார்கள். அவர்கள் பணி முதல் குடும்பம் வரை அனைத்தையும் மேலாண்மை செய்யவேண்டும். அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தால்தான் அந்தக் குடும்பம் சிறக்கும். ஆனாலும் அந்த அம்மாக்கள் தங்களுக்காக சில விஷயங்களை மனதில்கொள்ளவேண்டும். அதுகுறித்து மற்றவர்களின் பார்வை எப்படி இருக்குமோ என்பது குறித்து அவர்கள் மனக்கவலை கொள்ளக்கூடாது. இவையெல்லாம் பொதுவானதுதான். இது நபருக்கு நபர் வேறுபடும். இங்கு சில விஷயங்கள் குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. எனவே அவர்களுக்கு இவை தேவையான ஒன்று, இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும், புரிதலும் தேவைப்படுகிறது.