இட்லி
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.