பிரபலங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது வந்து சிக்கியுள்ளவர் ஜெயம்ரவி. இவரது விவாகரத்து அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் நாட்கள் தாண்டி இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பாடகி சுசித்ரா உள் நுழைந்துள்ளார். பாடகி சுசித்ரா, அவரது கணவர் கார்த்திக், நடிகர் தனுஷ், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் குறித்தும் பேசி அவ்வப்போது விவாதங்களை கிளப்பி வருகிறார். இந்நிலையில், அவர் அவர் தற்போது விவாகரத்து விஷயத்தில் ஜெயம்ரவியின் மனைவிக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் கூறிய சில விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.