ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 தொழில்நுட்பம்
புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய மாடல்களை கொண்ட அதே ஜே-சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 349சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்-ல் 20 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், கீழ் பகுதியில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கின் முன்புறம் 19 அங்குலமும், பின்புறத்தில் 18 அங்குலமும் பொருத்தப்பட்டுள்ளது.