வில்லனாக மிரட்டல்
வில்லன் நடிகராகவும் பல படங்களில் நடிப்பில் மிரட்டியுள்ளார் மோகன் மகேந்திரன். மகாநதி படத்தில் கமலின் மகளை பாலியல் தொழிலில் தள்ளிவிடும் மிரட்டலான வில்லனாக நடித்திருப்பார். அதே போல் நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், பட்டியல் என பல படங்களில் வில்லத்தனமான கேரக்டர்களில் தோன்றியுள்ளார்.