நிலவிடம் இருந்து பெறப்பட்ட அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்களை இங்கு பாருங்கள். நிலவு என்றாலே அமைதி, ஒளி, பல ஆண்டுகளாக தொடரும் மர்மங்கள். உலகம் முழுவதிலும் பல்வேறு கலாச்சாரங்களில் அதன் பாதிப்பு இருக்கும். தொலைவில் இருக்கும் நிலவு இரவின் இருளைப் போக்கி ஒளி தருவது மட்டுமல்ல, பல கவிஞர்களின் கற்பனையை வளர்த்திருக்கிறது. இதோ உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு பெயரும் கொடுக்கிறது. நிலவு என்றாலே அழகு மற்றும் அமைதி என்று பொருள். உங்கள் ஆண் குழந்தைகளுக்கு நீங்கள் நிலவிடம் இருந்து சில தேர்ந்தெடுத்த பெயர்களை வைக்கலாம். அவர்களும் உங்கள் வாழ்வின் இருளைப்போக்குபவர்களாகவும், அமைதியான உங்கள் வாழ்வில் மேலும் அமைதியைக் கொண்டுவருபவர்களாகவும் இருப்பார்கள். நிலாவிடம் இருந்து பெண் குழந்தைகளுக்குத்தான் அதிக பெயர்கள் கிடைக்கும், என நீங்கள் எண்ணினால் உங்களுக்கு ஆண் குழந்தைகளின் பெயர்களை இங்கு தொகுத்துள்ளோம்.