இதுதொடர்பாக சினிமாவின் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24×7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’சமீபத்தில் நகுல் கதாநாயகனாக நடித்த படம், வாஸ்கோடகாமா. இந்தப் படத்தில் நடிகை சுனைனா நடிகையாக நடித்து இருந்தார். ஆனால், இப்படத்தில் முதன்முதலில் நடிகையாக கமிட் ஆனவர்,நடிகை பிரிகிடா. அவர் படப்பிடிப்புக்கு வரும்போது அவருடன் துணைக்கு அவரது அப்பா வருவார். அப்போது அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார், நடிகர் நகுல். மறுத்திருக்கிறார், நடிகை பிரிகிடா. இதன்காரணமாக நடிகை பிரிகிடாவை நீக்கிவிடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார், நடிகர் நகுல். அவருக்குப் பதிலாக, நடிகை சுனைனாவை இப்படத்தில் கதாநாயகி ஆக்கிவிடுங்கள்; அவர் நன்கு ஒத்துழைப்பார் எனக் கூறியிருக்கிறார், நடிகர் நகுல். இதனை அப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்துரு வெளியில் கூறியிருக்கிறார். இதுபற்றி படக்குழுவினரிடம் விசாரிக்கையில், ’சந்துரு ஒரு லூஸு; இரண்டு மூன்று நாட்கள் தான் வந்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் இயக்குநர் அவரை நீக்கிவிட்டார். அந்த வன்மத்தைத் தீர்க்க இப்படிப்பழிபோடுகிறார், சந்துரு’ எனப் படக்குழுவினர் விளக்கமளித்தனர்.