யார் வெல்ல வாய்ப்பு?
போபிரின் 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோகோவிச், இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல விருப்பமானவரை தேர்வு செய்தார். “போபிரின் தகுதியானவர், அவர் செய்ததைப் போல சிறப்பாக விளையாடினால், அவர் யாரையும் வீழ்த்த முடியும். அல்கராஸ் வெளியேறிவிட்டார், இதுவரை இது பெரிய ஆச்சரியங்களுடன் ஒரு போட்டியாக இருந்தது. இந்த நேரத்தில் ஜானிக் சின்னர் எனது ஃபேவரைட் பிளேயர், ஆனால் பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோரும் உள்ளனர், அவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் மற்றும் ஆச்சரியப்படுத்தலாம், பின்னர் ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோரும் உள்ளனர்” என்றார்.