Ulcer : கீரை என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. அதிலும் மணத்தக்காளி கீரை என்றால் பலருக்கு அலர்ஜிதான். காரணம் அதன் கசப்பு தன்மை. மணத்தக்காளி கீரையின் கசப்பே தெரியாமல் பருப்பு சேர்த்து கடையல் செய்வது எப்படி என பார்க்கலாம். இது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும். இது வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்ணை சரிப்படுத்த உதவும். தொடர்ச்சியாக மணத்தக்காளி கீரை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வியர்வை, மற்றும் சிறுநீர் வழியாக கெட்ட நீரை வெளியேற்றும். உடல் சூட்டை தணிக்க உதவும். ஆண்களின் விந்தணுக்கள் வலிமையாக இருக்க விந்தணுக்களின் உயிர்ப்பு அவர்களது நரம்புகளின் வலுவிலும், இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்திலும் அடங்கியிருக்க இந்த மணத்தக்காளி கீரை மிகவும் உதவும். மேலும் பெண்களுக்கு கர்ப்பபையை வலுப்படுத்த உதவும். கருவை பலப்படுத்துவதோடு கருவுற்ற பெண்களின் கரு வலிமையாக இருக்கவும் இந்த கீரை பெரிதும் உதவும்.