சேலம் ஸ்பெஷல்
மாலை வேலையில் சேலம் மாநகரின் பல இடங்களில் தட்டுவடை செட், முறுக்கு செட், தக்காளி செட் எனப் பல வகைகளில் ஆரோக்கியமான தின்பண்ட விற்பனை களைகட்டுகிறது. அடியில் ஒரு தட்டுவடை, அதற்கு மேல் துருவிய கேரட், பீட்ரூட், வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்களை வைத்து, பின்னர் தக்காளி சட்னி, பூண்டுச் சட்னி, வெங்காயச் சட்னி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சிறிதளவு இட்டு, மிளகுத் தூள், சீரகத் தூளைச் சற்றுத் தூவி, நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு, மீண்டும் மேலே ஒரு தட்டுவடையை வைத்து மூடி ‘தட்டுவடை செட்’ என்று செய்து தருகிறார்கள். சில கடைகளில் பத்து முதல் பதினைந்து வகையான சட்னி/துவையல் வகைகள் சுவைக்கேற்ப கலக்கப்படுகின்றன.