நீரிழிவு நிர்வாகத்தை பாதிக்கும் உணவு நுகர்வு:
அதிக உணவு உட்கொள்வது, பசியின்மை போன்ற உணவுக் கோளாறுகள் நீரிழிவு கட்டுப்பாட்டை கடுமையாக பாதிக்கும். இதுதொடர்பாக அந்த மருத்துவர் மேலும் கூறியதாவது, “உதாரணமாக, பசியின்மை உள்ளவர்கள் தங்கள் உணவு உட்கொள்ளலை மிகவும் கட்டுப்படுத்தலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும். மறுபுறம், அதிகப்படியாக உண்ணும் பழக்கம் கொண்ட ஒருவர் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதால், நீரிழிவு நோய் அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிப்பது முக்கியம்’’ என்றார்.