புதினா, கொத்துமல்லி இந்த செய்முறைக்கு தேவையில்லை. அவை, நெய் சோற்றின் சுவையை மாற்றிவிடும். வெங்காயம், முந்திரி வதங்கியதும், அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை போடவும். பிரியாணி போல, இதற்கு பெரிய அளவில் மசாலாவும், பொருட்களும் தேவைப்படாது. ஆனால், பிரியாணியை விட அதீத சுவையோடு இருக்கும். அடுப்பை குறைத்துவிட்டு, 4 டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் தண்ணீர் வீதம், குக்கரில் முதலில் தண்ணீரை ஊற்றவும்.