பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தினமும் குறைந்தது 11 நிமிடங்களாவது நடப்பது நாள்பட்ட நோய்களால் ஏற்படும் அகால மரண அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மூன்று கோடிக்கும் அதிகமான மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதுடன், அவர்களின் ஆயுட்காலமும் கூடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.