TRADITIONAL SAREES: இன்றைய பேஷன் உலகில் மார்டனாக உடையணிந்தாலும் எல்லா பெண்களுக்கும் சேலை மீது ஒரு தனிப்பட்ட ஆரவம் இருக்கத் தான் செய்கிறது. தற்போது பெண்கள் அணியும் சேலை மாறி, சுடிதார், குட்டை சட்டை, கவுன் போன்றவைகளும் ஆண்கள் அணியும் வேட்டி மறைந்து பேண்ட் மற்றும் ஜீன்ஸ் போன்றவைகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்றும் விழாக்கள், திருமணங்கள், பாரம்பரிய நிகழ்வுகளில் வேட்டி, சேலைகளுக்குத்தான் மவுசு அதிகம். இந்த நிலையில், தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலை ரகங்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.