பிரதமர் மோதி கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானம் செய்த போது விடுப்பில் இருந்தாரா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இந்த ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 45 மணிநேரம் தியானம் செய்தார். அது நாடாளுமன்றத் தேர்தல் கடைசி கட்டத்தில் இருந்த நாட்கள். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி செலவிட்ட 45 மணி நேரம் அரசுப் பதிவேடுகளில் எப்படிப் பதிவாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தது. இந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி விடுப்பு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.