உணர்வு ரீதியாக சோர்ந்திருப்பது
பயம், பதற்றம், மனஅழுத்தம், சோர்வு என அனைத்தும் உங்கள் குழந்தைகளை பாதித்திருந்தால், அது அவர்களுக்கு கவனக்குறைவை ஏற்படுத்தும். இதனாலும் அவர்களும் நீங்கள் கூறுவதை கேட்கமாட்டார்கள். எனவே குழந்தைகளுக்கு மனஅமைதி மிகவும் அவசியம். அவர்கள் மனஅமைதியின்றி இருந்தால், அவர்களுக்கு வேறு சில பிரச்னைகளும் ஏற்படும். எனவே அவர்களின் மனஅமைதியை பேணுங்கள்.