மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுகிறேன்
இனிமேலும் பொய்களைக் கூறி,கீழ்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுய பரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் சட்டப் படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், திருஅஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்து உள்ளார்.