இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்பியான், முகமது ரியான் அட்ரியன்டோ ஜோடியை வீழ்த்தியது. ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.