டாப்ஸி பானு ஏன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுப்பதில்லை?:
டாப்ஸி பானுவிடம் ஏன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க விரும்பவில்லை என கேட்கப்பட்டபோது, ‘’இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதால், எனக்கு நடிக்க எந்தப் படங்களும் வருவதில்லை. நான் நடித்த எனது படம் தான், என்னைப் பற்றி பிறரிடம் பேசவைக்கின்றது. எனவே, ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒரு பகுதியை நான் சமாதானப்படுத்தவேண்டியதில்லை. நான் அவர்களை நேரடி ஊடகம் என்று கூட அழைக்கமாட்டேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் சுயநலனுக்கு இப்படி செலிபிரட்டிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கிறார்கள். யாரோ ஒருவர் தன் இணையதளத்தில் புகைப்படங்களைப் பதிவிடுகின்றனர். நான் அவர்களை ஊடகங்கள் என்று சொல்லமாட்டேன். ஊடகங்கள் அவசர அவசரமாக வரிகளையோ அல்லது வீடியோக்களையோ வெளியிடாது” என்று டாப்ஸி மேலும் கூறினார்.