பப்பாளி பழம் நம் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதில் உள்ள இயற்கையான மலமிளக்கிகள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசத்தைத் தடுக்கிறது. இந்த பழத்தின் சிறப்பு என்னவென்றால், பழங்கள் மட்டுமல்ல, இலைகளிலும் மந்திர ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.